ரயில்வே சர்வீஸ் கமிஷனோ...
பேங்க் எக்ஸாமோ...
ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷனோ...
எந்தப் பரீட்சைக்குப்போனாலும்
பெஞ்சுகளில் பொறித்த
பெயர்கள்
பால்யத்தை நினைவுறுத்தி
பரீட்சையில்
ஃபெயிலாக்குகின்றன.
Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts
Friday, September 14, 2007
தாம்பத்யம்
இந்தமுறை
நீதான்உடைக்க வேண்டும்.
அதுவரை என்னுள்
எத்தனை காலமானாலும்
எத்தனை கனமானாலும்
நான் சுமப்பேன்
அந்த மௌனத்தை...
அத்தனை கஷ்டமில்லை அது
மௌனத்துக்குமுந்தைய
அந்தக்கடைசி வார்த்தையை விட!
நீதான்உடைக்க வேண்டும்.
அதுவரை என்னுள்
எத்தனை காலமானாலும்
எத்தனை கனமானாலும்
நான் சுமப்பேன்
அந்த மௌனத்தை...
அத்தனை கஷ்டமில்லை அது
மௌனத்துக்குமுந்தைய
அந்தக்கடைசி வார்த்தையை விட!
Thursday, September 13, 2007
அம்மா வீடு போயிருப்பவளுக்கு...
நம் படுக்கை
ஒழுங்கு குலையாமல் கிடக்கிறது...
என் படுக்கையாக...
நீயில்லாத
நேற்று
நல்ல மழை
கடலில்...
உன் பெயரில் மட்டும்
ஒருநூறு இணைப்புகள்
சென்னைத் தொலைபேசியில்!
கர்ப்பகாலம்
பத்து மாதமாம்...
கண்ணின் பொறியில்
கந்தனைச் செய்தவனும்...
அரைத்த மஞ்சளில் - அவன்
அண்ணனைச் சமைத்தவளும்
அறிவார்களா பிள்ளைப் பேற்றுப் பிரிவை!
ஒழுங்கு குலையாமல் கிடக்கிறது...
என் படுக்கையாக...
நீயில்லாத
நேற்று
நல்ல மழை
கடலில்...
உன் பெயரில் மட்டும்
ஒருநூறு இணைப்புகள்
சென்னைத் தொலைபேசியில்!
கர்ப்பகாலம்
பத்து மாதமாம்...
கண்ணின் பொறியில்
கந்தனைச் செய்தவனும்...
அரைத்த மஞ்சளில் - அவன்
அண்ணனைச் சமைத்தவளும்
அறிவார்களா பிள்ளைப் பேற்றுப் பிரிவை!
Tuesday, September 11, 2007
தனியே ஒரு பயணம்...
மத்தியான ரயிலில் போய்
இறங்கிய ஒருநாள்
மழை ஈரத்தில்
மண் மணத்திருந்தது...
எதிர் காற்றில்
சருகுகள் கால் தழுவி
சலசலக்க
இரண்டாவது பிளாட்பாரத்தில்
ஒருமுறைஇறங்கியிருக்கிறேன்...
ஆனால், ஒருமுறைகூட
யாரேனும் வரவேற்கக் காத்திருக்கையில்
வந்து இறங்கவாய்த்ததில்லை..!
இறங்கிய ஒருநாள்
மழை ஈரத்தில்
மண் மணத்திருந்தது...
எதிர் காற்றில்
சருகுகள் கால் தழுவி
சலசலக்க
இரண்டாவது பிளாட்பாரத்தில்
ஒருமுறைஇறங்கியிருக்கிறேன்...
ஆனால், ஒருமுறைகூட
யாரேனும் வரவேற்கக் காத்திருக்கையில்
வந்து இறங்கவாய்த்ததில்லை..!
Wednesday, August 29, 2007
டிஸ்கவரி சேனல்...
எத்தனை மான்களுக்கு
வாய்க்கிறது
வயோதிகத்தில் மரணம் தழுவும்
வாய்ப்பு..!
புள்ளிகளாலும்
பிடறி மயிராலும்
கோடுகளாலும்
வேறுவேறாயினும்
எல்லாக் கண்களிலும்
ரத்தச் சிவப்பு..!
நீண்டு கிடக்கிறது
பாம்புத்தடம்
நச்சு வாசனையோடு..!
கடல் உவர்ப்பின்
காரணத்தை
யாராவது கேட்டிருப்பார்களா
கண்ணீர் சிந்தும்
மீன்களிடம்..!
பயனுள்ளதுதான் வாழ்க்கை
பரிசோதனைக்கூடத்தில்
பட்டாம்பூச்சி..!
இறந்தாலும்
இருந்தாலும்
ஆயிரம் பொன் - சரி
இரந்தால்..?
வாய்க்கிறது
வயோதிகத்தில் மரணம் தழுவும்
வாய்ப்பு..!
புள்ளிகளாலும்
பிடறி மயிராலும்
கோடுகளாலும்
வேறுவேறாயினும்
எல்லாக் கண்களிலும்
ரத்தச் சிவப்பு..!
நீண்டு கிடக்கிறது
பாம்புத்தடம்
நச்சு வாசனையோடு..!
கடல் உவர்ப்பின்
காரணத்தை
யாராவது கேட்டிருப்பார்களா
கண்ணீர் சிந்தும்
மீன்களிடம்..!
பயனுள்ளதுதான் வாழ்க்கை
பரிசோதனைக்கூடத்தில்
பட்டாம்பூச்சி..!
இறந்தாலும்
இருந்தாலும்
ஆயிரம் பொன் - சரி
இரந்தால்..?
Subscribe to:
Posts (Atom)
